கண்காணிப்பு கேமராக்கள் துவக்கி வைத்தார் எஸ்.பி., Dr.M.சுதாகர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் ஒரகடம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் அறிவுரைகளையேற்று ஒரகடம் பகுதி முழுவதும் 110 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். இக்கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் 03.02.2022 அன்று துவக்கி வைத்தார்.
ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுனில் அவர்கள் உடன் இருந்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குற்றங்களை வெகுவாக தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், பொதுமக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தருவதற்கும் "மூன்றாவது கண்" என அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுகின்றன.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் குற்றச்செயலில் ஈடுபட எவரும் துணியமாட்டார்கள், எனவே, இதுபோல மற்ற பகுதிகளிலும் பொதுமக்கள் தானாக முன்வந்து தங்களது பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு கிராமங்களிலும் நான்கு கேமராக்கள் இருந்தால் குற்றங்களை பெருமளவில் தடுக்கலாம் என்றும் கூறினார்.
No comments
Thank you for your comments