காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு வேட்பாளர் தர்னா போராட்டம்
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் வருகை தந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில்12 வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சூரியபாரதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
No comments
Thank you for your comments