Breaking News

வாலாஜாபாத் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி ஏற்பாடுகள் தீவிரம்

 காஞ்சிபுரம், பிப்.15-

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். 

தேர்தலுக்கு  சில தினங்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவு மையங்களை ஏற்பாடு செய்தல், பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தேர்தல் அலுவலர்களுக்கான முன்னேற்பாடுகளை செய்வது வாக்காளர்களுக்கு கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை வழங்குவது, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு மூன்று சக்கர சைக்கிளை நிறுத்தி அவர்கள் அதனை பயன்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு கட்ட பணிகளை முழு வீச்சாக செய்து வருகின்றனர். 

இந்நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சியில் 100% வாக்களிப்பது வலியுறுத்தி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேமா தலைமையில் பேருந்து நிலையத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து நான்கு பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் சிசிடிவி  கேமராக்கள் பொருத்துவது. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து வாக்குச்சாவடி மையங்கள் முழுமையாக தூய்மைப்படுத்துதல் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு மூன்று சக்கர சைக்கிளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நிறுத்தி வைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.


No comments

Thank you for your comments