20வது வார்டு வேட்பாளரை ஆதரித்து திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம், பிப்.15-
காஞ்சிபுரம் மாநகராட்சி 20வது மாமன்ற திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து திமுகவினர் மற்றும் கூட்டணியினர் தீவிர வாக்கு சேகரிப்பு.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சியின் வேட்பாளர் ஆபிதா அவர்களுக்கு ஏணி சின்னத்தில் ஆதரித்து 20வது வார்டுக்கு உட்பட்ட ரெடிப்பேட்டை தெரு, ஐதர்பேட்டை தெரு, வெங்கடேச பாளையம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வட்ட செயலாளர் காசிம் பாஷா, வட்ட பொறுப்பாளர் இளங்கோவன், வட்ட மூத்த பிரதிநிதி ஜாபர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஏணி சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.
இதில் வட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் அபாஸ் அலி,புள்ளலூர் முனிரத்தினம்,பரந்தூர் நடராஜன் மற்றும் 20வது வட்டத்தை சேர்ந்த திமுகவினர் மார்க்கெட் தன்ஸ்,உமாசந்தர், தேவராஜ், ரிஷ்வான், சரவணன், அன்சர் பாஷா, மாபுப்பாஷா, பாபு, பஷீர், அல்தாப், ஜாகீர், ரஹ்மான், பைரோஸ் உள்ளிட்ட திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments