Breaking News

மண்டை மீது கொண்டை வைத்து கொள்கை இல்லாமல்... கெட்டப்பை மாற்றினீர்களே கேரக்டரை மாற்றினீர்களா இளவழகன் ! - ஏ.பி.நந்தகுமார் கேள்வி...

வேலூர்:

வேலூர் மாவட்ட துணை தலைவர் திரு கோ.சரவணன் என்பவரை மட்டும் வெறும் கண் துடைப்புக்காக கட்சியை விட்டு நிக்கியது யாரை ஏமாற்ற இளவழகன்? தன் சுயநலத்திற்காக எப்படியாவது தான் வெற்றி பெற்றால் போதும் என்ற நோக்கில் உங்கள் வேட்பாளர் தன் கட்சி கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும்  திரு.பரசுராமனை ஏன் கட்சியை விட்டு நீக்க வில்லை ?அது தான் உங்கள் கட்சியின் நிலைப்பாடா ?  மண்டை மீது கொண்டை வைத்து கொள்கை இல்லாமல் கெட்டப்பை மட்டும் மாற்றி கேரக்டரை மாற்ற வில்லை என்றால் இப்படி தான் மக்கள் மத்தியில் சிக்கி தவிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம் என்று  அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் / வேலூர் திமுக  மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் / வேலூர் திமுக  மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த சில தினங்களுக்கு முன் வேலூரில் பாமக வேட்பாளரை கடத்தியதாக எங்கள் மீது விசாரிக்காமல் குற்றச்சாட்டு வைத்த உங்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா அவர்கள், எங்கள் பதிலுக்கு பிறகு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்திருப்பார் எனறு நம்புகிறோம்.

பாமக இளவழகன்  உங்கள் அய்யா அன்று டிவிட்டரில் என்ன பதிவிட்டார் 

மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்று கூறியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், காரணம் மக்கள் செல்வாக்கு உள்ள பாமக வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 25-ல் போட்டியிடுகிறது. உங்கள் வேட்பாளரை கடத்தி மிரட்டிவதாக கூறி இல்லாத பொய்யை இட்டுக்கட்டியும் ஊரை கூட்டி ஒப்பாரி வைத்தீர்கள். அரசியல் நாகரீகம் கருதி சில இடங்களில் நாங்கள் பேசவில்லை. காரணம், நீங்கள் குறிப்பிட்ட மக்கள் செல்வாக்கு எங்களுக்கு இருக்கிறது. 


நீங்கள் போட்டியிடும் 25 வார்டுகளில் பாமகவிற்கு அதிமுக ஆதரவு அளித்தால், மீதி 35 வார்டுகளில் அதிமுகவிற்கு பாமக ஆதரவு அளிக்கும் என்று ஒப்பந்தம் செய்துக் கொள்ள பாமக நிர்வாகிளுடன் பாமக வேட்பாளரும் சென்று அதிமுக மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கேட்டு இருக்கிறார்கள். 25 வார்டில் அதிமுகவை எதிர்க்கும் பாமக, 35 வார்டில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது எந்த வகையான யுக்தி என மக்களிடம் கூறுங்கள். 

இளவழகன்... மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கின்ற உங்கள் கட்சி வேட்பாளரை நாங்கள் கடத்தியதாகவும் மிரட்டியதாகவும், அவர் அச்சத்தில், பதற்றத்தில் தன் தொழில் முடங்கி விடும் என்ற பயத்தில் எங்களை சந்தித்ததாக கூறிய நீங்கள், இப்போது  அதே வேட்பாளர்  அதிமுக மாவட்ட செயலாளரையும் சந்தித்தாரே ? அவர்களும் உங்கள் வேட்பாளரை கடத்தினார்களா ? அல்லது அதிமுகவை எதிர்த்தால் தொழில் செய்ய முடியாது என்று  மிரட்டினார்களா ? இளவழகன் உங்களால் கூற முடியுமா ?

அப்படி சந்தித்தவர்களில் வேலூர் மாவட்ட துணை தலைவர் திரு கோ.சரவணன் என்பவரை மட்டும் வெறும் கண் துடைப்புக்காக கட்சியை விட்டு நிக்கியது யாரை ஏமாற்ற இளவழகன்? தன் சுயநலத்திற்காக எப்படியாவது தான் வெற்றி பெற்றால் போதும் என்ற நோக்கில் உங்கள் வேட்பாளர் தன் கட்சி கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும்  திரு.பரசுராமனை ஏன் கட்சியை விட்டு நீக்க வில்லை ?அது தான் உங்கள் கட்சியின் நிலைப்பாடா ? 

இப்போது தெரிகிறதா  இளவழகன் வேலூரில் மட்டுமல்ல தமிழகத்திலும் யார் மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்கள் என்று, திமுக வேட்பாளரை களத்தில் எதிர்கொள்ள தயங்கும் பாமக வேட்பாளர்கள் தான் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் என்பதை மறக்க வேண்டாம், திமுக எப்போதும் மக்கள் செல்வக்குள்ள இயக்கம் என்பதை அறிவீர்கள்.

இறுதியாக ஒன்றை கூறுகிறேன்..

மண்டை மீது கொண்டை வைத்து கொள்கை இல்லாமல் கெட்டப்பை மட்டும் மாற்றி கேரக்டரை மாற்ற வில்லை என்றால் இப்படி தான் மக்கள் மத்தியில் சிக்கி தவிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம் .

இவ்வாறு  அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் / வேலூர் திமுக  மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 

No comments

Thank you for your comments