Breaking News

திருப்பதியில் ரதசப்தமி விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருப்பதி:

திருப்பதியில் ரதசப்தமி விழா நடைபெறுவதையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்கள், பழவகைகள் கொண்டு அலங்காரம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ரதசப்தமி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சூரிய உதயம் தொடங்கி இரவு வரை ஏழுமலையான் அடுத்தடுத்து 7 வாகனங்களில் மாடவீதிகளில் உலா வருவார்.

சாமி வீதி உலா வருவதை காண்பதற்காக மாடவீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்தாண்டு ரதசப்தமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.. 

கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு உள்ளேயே ஏழுமலையான் உலா நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சே‌ஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அம்ச வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் காட்சியளிக்கிறார்.

ரதசப்தமி விழா நடைபெறுவதையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்கள், பழவகைகள் கொண்டு அலங்காரம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments