கோவையில் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரம்
கோவை, பிப்.16-
கோவை மாவட்டம் இன்று (16ஆம் தேதி) பல்வேறு பகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
கோவை மாநகராட்சி தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கூட்டணியின்றி தனித்து களம் காணும் அவர்களுக்கு ஆதரவாக, பிரசாரம் மேற்கொள்ள, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று கோவை வருகிறார். காலையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.
மாலை, 6:00 மணிக்கு வேலாண்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து சிங்காநல்லூர், மசக்காளிபாளையம் மைதானத்தில், மாலை, 8:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில், தேர்தல் பிரசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments