Breaking News

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாய மின் இணைப்பு பயனாளிகள்

ஈரோடு, பிப்.24-

ஈரோடு மாவட்டத்தில் ‘விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும்” திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகள் முதலமச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்சாரவாரியம் சார்பில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதியமின் இணைப்புகள் வழங்கும் ஆணையை முதலமைச்சர் வழங்கினார். அதன்படிமாதத்திற்கு 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கி 4 மாதத்திற்குள்ளேயே திட்டத்தை முடிக்க மின்சாரத்துறை திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்கீழ் 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில் முதல்கட்டமாக 1 லட்சம் பேருக்கு இணைப்புதர திட்டமிடப்பட்டுள்ளது.

அரசின் விவசாயமின் இணைப்பு திட்டத்தினை பொறுத்தவரை சாதாரணபிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் மின் இணைப்பு பெற ரூ.10,000/-, ரூ.25,000/-, ரூ.50,000/- என 3 வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் கட்டணம் செலுத்திபதிவு செய்தபிறகும் மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 

இதில்,  5 குதிரைதிறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 இலட்சம்,  7.50 குதிரைதிறனுக்கு ரூ.2.75 இலட்சம்,  10 குதிரைதிறனுக்கு ரூ.3 இலட்சம்,  15 குதிரைதிறனுக்கு ரூ.4 இலட்சம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் ஆகிய 2 மின்பகிர்மான வட்டங்கள் உள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த ஈரோடு மின் பகிர்மான வட்டம் நகரியம், தெற்கு, பெருந்துறை கோட்டத்திற்கு உட்பட் டவிவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண்/கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டத்தில் 1187 எண்ணிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,  467 எண்ணிக்கையிலும், கோபிசெட்டி பாளையம் மின்பகிர்மான வட்டத்தில் 2105 எண்ணிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,  780 எண்ணிக்கையிலும் விவசாயமின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு 31.03.2022-க்குள் மின் இணைப்பு வழங்க விரைந்துநடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 

ஈரோடு மாவட்டம்,  ஈரோடு மின்பகிர்மான வட்டம், முள்ளாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார்,  த/பெ.ரத்னசாமி என்பவர் தெரிவித்ததாவது,  (மின் இணைப்பு எண்:0270053427, நாள்:10.01.2022)

நான் 4 ஏக்கர் நிலத்தில் விவசாய தொழில் செய்துவருகிறேன். எனக்கு ஒருமகனும், ஒருமகளும் உள்ளனர்.  தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாயமின் இணைப்பு வழங்கும்” திட்டத்தின்  கீழ் பயன் பெற்றுவருகிறேன். இத்திட்டம் குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன். 

நான் ஈரோடு மேற்கு மின்பகிர்மான வட்டத்தில், வைப்புத் தொகையாக ரூ.2.50 இலட்சம் செலுத்தி தட்கல் முறையில் விண்ணப்பித்து இருந்தேன். இத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு வழங்கப்பட்டுவருகிறது. எனது வீட்டிற்கு அருகிலேயே மின் இணைப்புகம்பம் இருந்ததால், விண்ணப்பித்த ஒருமாத காலத்திற்குள், எனக்கு அளவீட்டு கருவியுடன் 5HP அளவில் இணைப்பு வழங்கப்பட்டது. 

நான் தற்பொழுது, தென்னை, சோளம், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் பயிரிட்டுள்ளேன். விவசாய மின் இணைப்பு பெறுவது சிரமமான சூழ்நிலை இருந்து வந்த நேரத்தில்,  தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்த ஒரு இலட்சம் விவசாயமின் இணைப்பு வழங்கும்” திட்டத்தின் கீழ் நான் மிகவிரைவில் பயன்பெற்றுள்ளேன். “விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாயமின் இணைப்பு வழங்கும்” திட்டத்தினை அறிவித்து செயல்படுத்திவரும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைª தரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டம், பெருந்துறை பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.சுப்ரமணியம்,  த/பெ.சென்னிமலை என்பவர் தெரிவித்ததாவது, (மின் இணைப்பு எண் : 056007910, நாள்:28.12.2021)

நான் 2.50 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். நான்  தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்துள்ள “விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும்” திட்டத்தின் கீழ்; பெருந்துறை மின்பகிர்மான வட்டத்தில், வைப்புத் தொகையாக ரூ.2.75 இலட்சம் செலுத்தி தட்கல் முறையில் விண்ணப்பித்து இருந்தேன். நான் விண்ணப்பித்த குறுகிய காலத்திலேயே, எனக்கு அளவீட்டுகருவியுடன் 7.5 HP அளவில் இணைப்பு வழங்கப்பட்டது. நான் தற்பொழுது நெற்பயிர் மற்றும் சோளம் பயிரிட்டுள்ளேன். எங்களின் வாழ்வாராத்தை மேம்படுத்திடும் வகையில், “விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாயமின் இணைப்பு வழங்கும்” திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார். 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் மின்பகிர்மான வட்டம், தெற்கு சித்தோடு பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.தெய்வசிகாமணி,  த/பெ.செல்லப்ப கவுண்டர் என்பவர் தெரிவித்ததாவது, (மின் இணைப்பு எண்:016003221, நாள்:08.12.2021)

நான் 3 ஏக்கர்நிலத்தில் விவசாயம் செய்துவருகிறேன். நான் சிறுவயது முதலே விவசாயம் தான் செய்துவருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒருமகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தற்பொழுது நிலத்தில் நெல் மற்றும் சோளம் பயிரிட்டுள்ளேன். நான் விவசாயமின் இணைப்பு கோரி கடந்த 7 வருடங்களுக்கு முன் வைப்புத் தொகையாக ரூ.500/- செலுத்தி விண்ணப்பித்திருந்தேன்.  

தமிழ்நாடு முதலமைச்சர்  பதவியேற்றவுடன், ஒரு இலட்சம் விவசாயி களுக்குமின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் இத்திட்டம் அறிவித்த, 15 நாட்களுக்குள், எனக்கு 5 HP அளவில் மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. இணைப்பு வழங்கிய பின் ரூ.24,500/- தொகையை செலுத்தி உள்ளேன். இத்திட்டம் எனக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். 

தொகுப்பு : 

க.செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

No comments

Thank you for your comments