Breaking News

வேலூர் மாவட்த்தில் மற்றொரு திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு...

வேலூர்:

வேலூர் மாநகராட்சி காட்பாடி 1- வது மண்டலத்துக்குட்பட்ட 7 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட புஷ்பலதா வன்னியராஜ் போட்டியின்றி தேர்வு... 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி பிப்.4ம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது.  இதையடுத்து வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்றே கடைசி நாள்... 

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி காட்பாடி 1-வது மண்டலத்துக்குட்பட்ட 7 வது வார்டில் அதிமுக உட்பட 6 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஏற்கெனவே அதிமுக வேட்பாளர் சந்தியாவின் மனு நிராகரிக்கப்பட்டது.  மற்ற 4 வேட்பாளர்களான அமமுக, பாஜக, பாமக உள்ளிட்டோர் இன்று வாபஸ் பெற்ற நிலையில் திமுக வேட்பாளர் புஷ்பலதா வன்னியராஜா போட்டியின்றி தேர்வானர். 

இதேபோன்று முன்னதாக, காட்பாடியில் உள்ள மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் 8-வது வார்டில் அதிமுக சார்பில் சுரேஷ்குமார், பாமக சார்பில் நாயுடு பாபு (எ) ராமச்சந்திரன், பாஜக சார்பில் ராஜா தியாகராஜன் உட்பட்ட 6 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 5 பேரின் மனுக்களும் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. 

இதையடுத்து சுனில்குமார் போட்டியின்றி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டதாக சனிக்கிழமை அன்று அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


 

No comments

Thank you for your comments