Breaking News

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 12 உறுதிமொழியுடன் சத்தியப்பிரமாணம்

சென்னை:

கையூட்டு இல்லாமல் அனைத்து சான்றிதழ்களும், அரசு சேவைகளும் இடையூறு இல்லாமல் குறித்த காலத்திற்குள் கிடைக்கச் செய்வேன் என்பது உள்ளிட்ட 12 உறுதிமொழியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.


சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். 

அதன் விவரம் வருமாறு:-

 நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை நேர்மையாக எதிர்கொள்வேன்.

கிராமங்களில் “கிராம சபை” நடத்தப்படுவதுபோல், நகரங்களில் ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வேன்.

மக்கள் பங்கேற்போடு நடைபெறும் ஏரியா சபைக்கூட்டங்களில் என் வார்டில் நடைபெறும் பணிகளுக்கான வரவு-செலவு உள்ளிட்ட முழுமையான ரிப்போர்ட் கார்டை மாதந்தோறும் வழங்குவேன்.

தரமான குடிநீர், சுத்தமான தெருக்கள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்கள், நல்ல சாலைகள், எரியும் தெருவிளக்குகள் ஆகியவற்றை உறுதி செய்வேன்.

கையூட்டு இல்லாமல் அனைத்து சான்றிதழ்களும், அரசு சேவைகளும் இடையூறு இல்லாமல் குறித்த காலத்திற்குள் கிடைக்கச் செய்வேன்.

சாக்கடைகளைச் சீரமைத்து, கொசுக்களை ஒழித்து நோய்ப்பரவல் ஏற்படாத அளவிற்கு தெருக்களைத் தூய்மையாகப் பராமரிப்பேன்.

கட்டிட அனுமதிகளுக்குப் பெறப்படும் லஞ்சத்தை ஒழிப்பேன். மழைநீர் சேகரிப்பு திட்டம் இல்லாமல் கட்டிட வரைபட சான்றிதழ் வழங்குவதை தடுப்பேன்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழி நிலையை ஒழிக்க அயராது உழைப்பேன்.

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பட வார்டு கல்விக் குழுவை ஏற்படுத்தி அடிப்படை வசதிகளை, கல்வி கற்றலை மேம்படுத்துவேன்.

சாலைகள் போடும் பொழுது மட்டத்தை உயர்த்தாமலும், முழுமையான தரத்துடனும் சாலை போடும் பணியை முதல்வரோ, தலைமை செயலாளரோ ஆய்வு செய்துதான் முறைப்படுத்த முடியும் என்ற அவல நிலையை ஒழித்து கவுன்சிலர் பதவிக்கான பணியை நானே செவ்வனே செய்வேன். சாலைகளின் தரத்திற்கு 10 ஆண்டுகள் உத்தரவாதம் அளிப்பேன்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளைத் தடுப்பேன். கழக ஆட்சிகளில் சீரழிக்கப்பட்ட நீர்நிலைகளைச் சீரமைப்பேன்.

மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி அங்கு நிகழும் வசூல் வேட்டையைத் தடுப்பேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments