தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் கொண்டாட அனுமதி இல்லை - ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம், பிப்.21-
நகராட்சி, பேரூராட்சிகளில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு மிஷினில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டுக்கும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மிஷினில் பதிவானவை எண்ணப்படும். பூத் ஏஜென்ட்களுக்கு தேர்தல் அலுவலர் வழங்கிய ஐடி கார்டு, ஆதார்/வாக்காளர் அட்டை, தடுப்பூசி சான்றிதழ்/கொரோனா தொற்று இல்லை எனும் சான்றிதழ் அவசியம். அலைபேசி, கேமரா எடுத்த வர அனுமதி இல்லை. தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் கொண்டாட அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாவது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி, காஞ்சிபுரம் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி, குன்றத்தூர் ஆகிய இடங்களில் 22.02.2022 அன்று நடைபெற உள்ளது.
இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி, திருப்பெரும்புதூர் பேரூராட்சி, உத்திரமேரூர் பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியிலும், குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளுக்கு குன்றத்தூர் மாதா பொறியியல் கல்லூரியிலும் நடைபெறும். மொத்தம் 35 வாக்கு எண்ணும் மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. (மாநகராட்சி -14. நகராட்சி - 6 + 6, பேரூராட்சி 3 + 3 +3).
வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 70 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மொத்தம் 1195 அஞ்சல் வாக்கு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 6 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து 18 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தரும் அனைவரும் வாகனத்தை வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்த வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சிகளில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு மிஷினில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டுக்கும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மிஷினில் பதிவானவை எண்ணப்படும். பூத் ஏஜென்ட்களுக்கு தேர்தல் அலுவலர் வழங்கிய ஐடி கார்டு, ஆதார்/வாக்காளர் அட்டை, தடுப்பூசி சான்றிதழ்/கொரோனா தொற்று இல்லை எனும் சான்றிதழ் அவசியம்.
அலைபேசி, கேமரா எடுத்த வர அனுமதி இல்லை. அனைவரும் வாக்கு எண்ணும் மையத்தில் கைபேசியினை பயன்படுத்தக் கூடாது. தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் கொண்டாட அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
No comments
Thank you for your comments