இஸ்லாமிய உலமாக்கள் மற்றும் உமராக்கள் கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் இஸ்லாமிய உலமாக்கள் மற்றும் உமராக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் உலமாக்கள் மற்றும் உமராக்கள் கலந்தாய்வு கூட்டம் சின்ன காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெற்றது.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் கலீலூர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து மஸ்ஜித்களின் இமாம்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு பேச்சாளர்களாக மாநில உலமா மற்றும் உமரா கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் முஸ்தபா மற்றும் அதன் செயலாளர் அன்வர் பாதுஷா ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி ஆலோசனைகளை வழங்கினர்.
அந்த தீர்மானங்கள் அதாவது அதில் சிறுவர்களுக்கான மக்தப் மதரஸாவை சீராக நடத்துதல் என்றும் பெண் பிள்ளைகளுக்கான பிரத்யேக மக்தப் மதரஸாக்கள் மூலம் தீனுடைய கல்வி போதித்தல் சிறுமிகள் மற்றும் வயதுக்கு வந்தோர் மற்றும் முதியோர் ஆகியோருக்கு பிரத்யேக மார்க்க போதனை வகுப்புகள் ஏற்பாடு செய்தல் என்றும் மாதம் ஒருமுறை மஹல்லாதோரும் பெண்களுக்கான சிறப்பு பயான் ஏற்பாடு செய்தல் என்றும் மாதந்தோறும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தர்பிய்யா வகுப்புகள் ஏற்பாடு செய்தல் என்றும் மாதம் ஒரு முறை 40 மஸ்ஜித்கள் இணைந்து ஓரிடத்தில் திருமணத்திற்கு முந்தைய கலந்தாய்வு கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்தல் என்றும் மஹலாக்களில் ஏற்படும் குடும்பம் மற்றும் சொத்துரிமை உள்ளிட்ட பிரச்சனைகளில் சமரசத் தீர்வை ஏற்படுத்தும் பணிகளில் அனைத்து மக்களும் அனைத்து பள்ளிவாசல்களும் ஈடுபடுதல் என்றும் விதவைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது குறித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மேல் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஜமாஅத்துல் உலம சபையை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பரகதுல்லா, காஜாபஷூர், முஹம்மத் சகி, காஜாமு ஈனுத்தீன், அப்துல் அஹத், முஹம்மத் அசாருத்தீன்,முஹம்மத் காலித் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments