நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி - முதல்வரை ஆரத்தழுவிய பொதுச்செயலாளர்
சென்னை:
திமுக வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுக மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளது.
அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே வெற்றியை பதிவு செய்து வருகின்றன மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திமுக 21 இடங்களில் முன்னிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக வெற்றியை அடுத்து சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து ஆடி, பாடி வெற்றியை கொண்டாடினர்.
இந்நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு மீண்டும் திமுகவின் கோட்டை என நிரூபித்து வரலாற்று சாதனை படைத்த தமிழக முதல்வரும் கழக தலைவருமான மு.க. ஸ்டாலினை, கழக பொதுச்செயலாளரும், நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சருமான துரைமுருகன் உணர்ச்சிப் பூர்வமாக கட்டி அனைத்து தனது முதல் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர், ஆகியோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments