முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7 வரை நீதிமன்ற காவல்
சென்னை:
கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர்மீது 10 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டதாக தகவல் வெளியானது.
திமுக பிரமுகரை தாக்கியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். அதன்பின் அவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் முன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து வீட்டிலிருந்து போலீசார் அழைத்துச் செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியானது.
No comments
Thank you for your comments