அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் வழிகாட்டு நெறிமுறை கூட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலின்போது, கடைபிடிக்க வேண்டிய கோவிட் – 19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (07.02.2022) கூட்டம் நடத்தப்பட்டது.
சாலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பாதயாத்திரை, சைக்கிள் மோட்டார் வண்டிகள் ஊர்வலம் ஆகியவை 11 பிப்ரவரி 2022 வரை தடை செய்யப்பட்டுள்ளது. பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடர் அறிவுரைகளை வழங்கும்.
அரசியல் கட்சிகளின் ஊர்வலம், குறிப்பிட்ட வேட்பாளர்கள் அல்லது தேர்தல் தொடர்புடைய எந்த ஒரு குழுவும் 11.02.2022 வரை அனுமதிக்கப்பட மாட்டாது. பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடர் அறிவுரைகளை வழங்கும்.
இருப்பினும், கோவிட் – 19 வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றும் அடிப்படையில், அவ்வப்போது வாக்கு சேகரிக்கும் காலத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு மனித பேரணி நடத்த மீள ஆய்வு செய்யும்.
நியமிக்கப்பட்ட திறந்தவெளி மைதானத்தில் அரசியல் கட்சி அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் 1000 நபர்கள் அல்லது கூட்ட திடலின் கொள்ளளவிற்கு 50% மக்கள் அல்லது அவற்றில் குறைவான எண்ணிக்கையுடன் கூட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதியளிக்க முடிவெடுத்துள்ளது.
உள்அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சம் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் அல்லது உள் அரங்க கூட்டத்தின் கொள்ளளவை பொறுத்து 50% நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள படி, உள்ளரங்கு கூட்டம் (Indoor Meetings) நடத்தப்படும்போது மாவட்ட தேர்தல் அலுவலரால் தேர்தலின்போது கோவிட் தடுப்பு தொடர்பான பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தொடர்பு அலுவலரிடமிருந்து உரிய சான்று பெற வேண்டும்.
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நபர்களின் எண்ணிக்கை வரையறையை உயர்த்தி பாதுகாவர்கள் நீங்கலாக 20 நபர்களை அனுமதிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளின் போது, அரசியல் கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்களும் மற்றும் வாக்காளர்களும், பொதுமக்களும் கோவிட் – 19 பொருத்தமான நடத்தை முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி நடத்தை விதிமுறைகளை இணக்கமாக கடைபிடிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
2022 – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்கனவே உள்ள 10.12.2021 மற்றும் 25.01.2022 நாளிட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ள ஏனைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும்.
No comments
Thank you for your comments