கொரோனா தொற்று பரவல்... புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பேர்ன்
கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் எத்தனை நாட்களுக்கு தங்கியிருக்கும் என்று சுவிட்சர்லாந்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு மூலம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு பல்வேறு விதமான நோய் தாக்கம் ஏற்படுவதாக முதலில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நீண்ட நாட்களுக்கு உடல்வலி மற்றும் பிரச்சினைகள் நீடிப்பதாக கொரோனா பாதித்தவர்களும் கவலையோடு தெரிவித்தனர். குறிப்பாக ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் பிரச்சினை இருப்பவர்களுக்கு கொரோனா தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியது. தொடர்ந்து அந்த அச்சுறுத்தல் நீடித்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் எத்தனை நாட்களுக்கு தங்கியிருக்கும் என்று சுவிட்சர்லாந்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு மூலம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
கொரோனா தாக்கப்பட்ட ஒருவர் உடலில் பல ஆண்டுகளுக்கு வைரஸ் ஆங்காங்கே இருந்து கொண்டே இருக்கும். தடுப்பூசி செலுத்தப்படுவதால் அது தனது வேலையை காட்டாமல் முடங்கியிருக்கும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அது நிரந்தர எதிரியாக மாறிவிடும்.
கொரோனா தாக்கம் ஏற்பட்டதும், 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொண்டு இருக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த 15 நாட்கள் கால கட்டத்தில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் மிக மிக வேகமாக பரவும் ஆபத்து இருக்கிறது. அந்த வகையில் ஒரு நபர் சுமார் 100 பேருக்கு கொரோனா வைரசை பரப்பி விட முடியும் என்று ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் வந்துவிட்டால் அது பெண்களாக இருந்தால் 22 நாட்கள் கண்டிப்பாக இருக்கும். ஆண்களாக இருந்தால் 33 நாட்கள் கண்டிப்பாக இருக்கும். இணை நோய் இருப்பவர்களிடம் கொரோனா வைரஸ் பல நாட்களுக்கு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் கொரோனா நோயில் இருந்து ஒருவர் குணமடைந்து விட்டாலும், அவரிடம் இருந்து அந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.
அதாவது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் நல்ல உடல்நிலையில் இருப்பது போல இருந்தாலும், அறிகுறி ஏதும் இல்லாமலேயே அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனாவை ஏற்படுத்திவிட முடியும். சிலரிடம் 232 நாட்கள் வரை இந்த அபாயம் இருக்கிறது. கொரோனா தாக்கியவர்களில் சுமார் 8 சதவீதம் பேரால் அடுத்த 2 மாதங்கள் வரை மற்றவர்களுக்கு கொரோனாவை பரிமாற்றம் செய்துவிட முடியும்.
மொத்தத்தில் கொரோனா பாதித்த ஒரு நபர் 71 நாளில் இருந்து 232 நாட்கள் வரை மற்றவர்களுக்கு வைரசை அன்பளிப்பாக கொடுக்க முடியும். எனவே கொரோனா நோயாளிகளிடமிருந்து சற்று விலகியே இருக்க வேண்டும் என்று புதிய ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments