Breaking News

ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிப்பு!

வாஷிங்டன், பிப்.23-

ரஷ்யாவுக்கு வெளியே படைகளை பயன்படுத்த அனுமதிக்கும்படி அதிபர் புதின் எழுதிய கடிதத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, சர்வதேச சட்டத்தை ரஷ்யா அப்பட்டமாக மீறியுள்ளது. இது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம்.

ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை இப்போது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றன.

உக்ரைன் பற்றிய ரஷ்ய ஜனாதிபதி புதினின் கூற்றுகளால் நாங்கள் யாரும் ஏமாற மாட்டோம். புதின் தொடர்ந்தால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடும்.

உக்ரைனுக்கு அதிகளவில் தற்காப்புக்கான உதவிகளை அமெரிக்கா வழங்கும். நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பால்டிக் நட்பு நாடுகளுக்கு அமெரிக்க படைகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிட்டார்.

No comments

Thank you for your comments