உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழா.. சோனியா காந்திக்கு திமுக அழைப்பு
புதுடெல்லி, பிப்.23-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுய சரிதை புத்தகத்தை வரும் 28-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வெளியிடுகிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்1976-ம் ஆண்டு வரையிலான தனது 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை ‘உங்களில் ஒருவன்' என்ற பெயரில் எழுதியுள்ளார்.
முதல் பாகமாக வெளிவரும் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா வரும் 28-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இதில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வரும்படி அழைப்பு விடுத்தார். மேலும், உங்களில் ஒருவன் பாகம்-1 நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கினார்.
No comments
Thank you for your comments