பதட்டமான வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம், பிப்.14-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச் சாவடிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் வருகிற 19/02/2022 அன்று நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 384 வாக்குச்சாவடிகளில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 வாக்குச்சாவடிகளும், குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் 33 வாக்குச்சாவடிகளும், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சிகளில் 15 வாக்குச்சாவடிகள் என மொத்தமாக 88 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையென கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று(14.02.2022) பதட்டமான வாக்குச்சாவடிகளில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 1.கே.வி.கே நகராட்சி நடுநிலைப்பள்ளி 2. கைலாசநாதர் நகராட்சி தொடக்கப்பள்ளி 3.நாராயண குரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 4. சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, பிள்ளையார் பாளையம் 5.காஞ்சிபுரம் பெருநகராட்சி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொடக்கப்பள்ளி, வெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
ஆய்வின்போது வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்கள்.
இந்த ஆய்வின் போது உடன் மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
No comments
Thank you for your comments