Breaking News

ஊரக வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் முடிவடைந்த மற்றும் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

எழிச்சூர் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பில் கழிவு  நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்ட பணி, செரப்பணஞ்சேரி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.6.04 இலட்சம் மதிப்பில் கழிவு நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்ட பணி, வைப்பூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.17.32 இலட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இரண்டு அறைகள் கொண்ட கட்டப்பணி, மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.05 இலட்சம் மதிப்பில் கூழங்கலச்சேரி கிராமத்தில் நடைபெற்ற வரும் ஆணை குட்டை பணி, படப்பை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.12.55 இலட்சம் மதிப்பில் ஆஷா நகரில் உள்ள சமுதாய கிணறு அமைத்தல் பணி, அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகப் பணி, தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.30.60 இலட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரிக்கும் கூடம் அமைக்கும் பணி, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடுகள், மணிமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4.95 இலட்சம் மதிப்பில் ஊராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை கட்டடம் கட்டுதல் பணி மேலும், மணிமங்கலம் ஊராட்சியில் அரசு ஆரம்ப பள்ளி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். 

இந்த ஆய்வின் போது ஊராக வளர்ச்சி முகமை  செயற்பொறியாளர் திரு.அருண், உதவி செயற்பொறியாளர் திரு.சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,காஞ்சிபுரம். 


No comments

Thank you for your comments