மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப்.28-
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (28-02-2022) அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
38 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினர் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், விருகை ரவி, வெங்கடேஷ் பாபு, தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், ராஜேஷ், கே.பி.கந்தன் உள்ளிட்ட 8 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் திரண்டனர்.
பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாணவர் அணி மாநில துணை செயலாளர் வக்கீல் ஆ.பழனி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில இணை செயலாளர் டி.சி.கோவிந்த சாமி, மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர்.,மன்ற துணை செயலாளர் இன்பநாதன் உள்ளிட்டோர் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா, வடக்கு மாவட்ட செயலாளர் பலராமன், தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சண்டர், மத்திய மாவட்ட செயலாளர் பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், ஹரி, அப்துல் ரஹீம், துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் ராம் குமார், ஒன்றிய செயலாளர் புட்லூர் சந்திரசேகர், இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் நேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில் அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகம் எதிரில் அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோரது தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், கஜா, குணசேகரன், நகர செயலாளர்கள் ரவிக்குமார், சீனிவாசன், செந்தில்குமார், அம்மா பேரவை செயலாளர் எம்.ஜி.கே.கோபிகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
இதேபோன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக முன்னணி நிர்வாகிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அதிமுக டிவிட்டர் பதிவில்,
'ஒரு ஜனநாயக சமூகத்தில் கருத்துக்களைச் சொல்வதற்கு தடையோ, சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பாக இருக்க கூடாது' என்ற அண்ணாவின் கொள்கைகளுக்கு நேர்மாறாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் திரு.ஜெயக்குமார்அவர்களை கைது செய்த திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகமெங்கும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தொண்டர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு இந்த விடியா அரசிற்கும், அதனுடைய ஜனநாயகமற்ற செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உறுதியேற்போம். இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments