கலைஞர் வேடமணிந்து வாக்குகள் சேகரிப்பு
தருமபுரி, பிப்.16-
தருமபுரி நகராட்சி 31வது வார்டு வேட்பாளர் கணேசன் அவர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் வேடமணிந்து வாக்குகள் சேகரித்தனர்.
31 வார்டு பாரதிபுரம், குமரிபுரி காலனி, 66 அடி சாலை, எல்.ஆர்.மாணிக்கம் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, ஆகிய பகுதிகளில் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி அவர்கள் தலைமையில் நகர தேர்தல் பொறுப்பாளர் வழக்கறிஞர் தாமரைச்செல்வன் முன்னிலையில், நகர பொறுப்பாளர மே. அன்பழகன், வார்டு பொறுப்பாளர் என்.எஸ். கலைச்செல்வன், பாளை அன்பு, முத்தமிழன், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர்கள் பச்சையப்பன், பொன்னுசாமி, அமிர்தம் மற்றும் கழகத் தோழர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments