Breaking News

சேலத்தில் 123 மண்டல அலுவலர்கள் நியமனம்

சேலம், பிப்.16-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற 123 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 1,514 வாக்குச்சாவடிகளில் வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 

சேலம் மாநகராட்சிக்கு 60 மண்டல அலுவலர்களும், 6 நகராட்சிகளுக்கு 21 மண்டல அலுவலர்களும், 31 பேரூராட்சிகளுக்கு 42 மண்டல அலுவலர்களும் என மொத்தம் 123 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  

குறிப்பாக, தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வழங்கப்படும் வாக்குப்பதிவிற்குத் தேவையான வாக்குச்சாவடிப் பொருட்களை முறையாக வாக்குப்பதிவு மையங்களுக்கு ஒப்படைப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லுதல் குறித்து விளக்கப்பட்டது.

மேலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வைப்பு அறைகளுக்கு முறையாக கொண்டு செல்லுதல், வாக்குச் சாவடிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுருத்தப்பட்டது. 

No comments

Thank you for your comments