Breaking News

பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள் பாதியில் இறக்கி விடும் அவலம்

கோவை, பிப்.8-

கொரோனா குறைந்து பள்ளிகள் முழுமையாக திறப்பு பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள் பாதியில் இறக்கி விடும் நிலை. 

பள்ளிகள் முழுமையாக செயல்பட துவங்கியுள்ள நிலையில், சீருடை, இலவச பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள், பஸ்களில் பயணம் செய்வதில் சிரமம் எழுந்துள்ளது. பாதியில் இறக்கிவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள், முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகள் பின்பற்றினாலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. 

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி குழந்தைகளுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், மாணவர்களுக்கு சீருடை, பஸ் பாஸ் இதுவரை வழங்கப்படவில்லை.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை அமுதவள்ளி கூறுகையில், ''மாணவிகளுக்கு இலவச பயணம் என்பதால், சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. எங்கள் பள்ளி மாணவர்கள் பலரை, பஸ்சில் டிக்கெட் எடுக்க கண்டக்டர்கள் கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தனர். 

கூட்ட நெரிசலில் அவர்கள் கூறுவதை பொறுமையாக கேட்பது கூட இல்லையாம்.பல மாணவர்களிடம் சீருடை இல்லை, பஸ் பாஸ் இல்லை என்பதால் மாற்று ஏற்பாடு செய்து மாணவர்கள் பாதிக்காமல் இருக்க, பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

No comments

Thank you for your comments