Breaking News

சேலம் கோட்ட ரயில்வே துறை ரூ.8.41கோடி அபராத தொகை வசூல்

கோவை, பிப்.8-

கோவையில் கடந்த 10 மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1.47 லட்சம் நபர்களிடம் இருந்து ரூபாய் 8.41கோடி அபராத தொகையை சேலம் கோட்ட  ரயில்வே துறை வசூலித்துள்ளது. 

ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

சேலம் கோட்ட ரயில்வே துறைக்கு உட்பட்ட கோவை திருப்பூர் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை 1.47 லட்சம் பேரிடம் இருந்து ரூபாய் 8.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி மாதம் மட்டும் 3,707 பயணிகளிடமிருந்து ரூபாய் 18.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  என சேலம் கோட்ட தலைமை வணிகவியல் மேலாளர் ஹரி கிருஷ்ணா தெரிவித்தார் மேலும் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றார்.

No comments

Thank you for your comments