Breaking News

650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கில் தீ விபத்தை தடுக்க தீயணைப்பு வாகனங்கள் நிறுத்திவைப்பு

 கோவை, பிப்.8-

கோயமுத்தூர் மாவட்டம்  வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு ஒன்று உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இந்த குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தொடர்ந்து அடிக்கடி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு, சுவாசக்கோளாறு, ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மக்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வைத்தனர். 

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென தீப்பற்றியது தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. தீயணைப்பு துறையினர் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனர். 

மக்கள் கோரிக்கையை ஏற்று கோவை மாநகரம் தீயணைப்புத் துறை சார்பாக தற்காலிக தீயணைப்பு நிலையம் போல் அமைக்கப்பட்டு 4 தீயணைப்பு வாகனங்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நாலாபுறமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments