கன்னியாகுமரியில் 8 மனுக்கள் நிராகரிப்பு...376 மனுக்கள் ஏற்பு
கன்னியாகுமரி மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் மொத்தம் 384 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்து இருந்தார்கள்.
மேற்படி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீது தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் துணை அலுவலர்கள் அறையில் வைத்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது .
அதன்படி பரிசீலனையின் முடிவில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன , 376 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 07/02/2022 அன்று கடைசி நாளாகும் .
நகர்ப்புற தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கையாக 763 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் கடந்த 31/01/2022 அன்று இந்துக் கல்லூரி மற்றும் அல்போன்சா மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
அடுத்தகட்டமாக 374 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை (திங்கட்கிழமை-07.02.2022) இந்துக் கல்லூரியில் வைத்து பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன இவ்வாறு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments