உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.5 லட்சம் பறிமுதல்
காஞ்சிபுரம்:
வீடுகட்டுமான உரிமையாளரிடம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.5 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த மேத்தா என்பவர் காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடு கட்டுமானம் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் நகர் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், வீடுகட்டுமான பணிக்கு வங்கியில் இருந்து 7.5 லட்சம் ரொக்கத்தை எடுத்துகொண்டு, பழைய ரயில்வே சாலையில் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் இருந்து மின் நகர் பகுதிக்கு ரயில்வே சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ரயில்வே சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது வீடு கட்டுமான பணிக்காக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 7.5 லட்ச ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 7.5 லட்சம் ரூபாயை சரிபார்த்து மேத்தாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments