Breaking News

70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபாலில் வாக்களிப்பதற்கு ஏற்பாடு- தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் வருகிற 19ம் தேதி ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது கொரோனா பாதித்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும், வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணிநேரத்தில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகளுடன் வந்து வாக்கை பதிவு செய்தனர். அதுபோல 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் சலுகை வழங்கப்பட்டது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் வருகிற 19ம் தேதி ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. 

கொரோனா பாதித்தவர்களுக்கு ஓட்டுப்பதிவு தினத்தன்று கடைசி ஒருமணி நேரத்தை ஒதுக்கி கொடுக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

வயதானவர்களுக்கு எத்தகைய சலுகைகள் கொடுக்கலாம் என்பது பற்றி மாநில தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சலுகையை வழங்கலாமா என்று தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளது. அதன்பிறகு 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு  கிடைக்குமா என்பது தெரியவரும்.

No comments

Thank you for your comments