54வது வார்டு வேட்பாளர் சுதா வாக்குறுதிகளை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு:
திமுக கூட்டணியில் போட்டியிடும் சுதா, நாடார் மேடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சியில் 54வது வார்டில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுதா என்பவர் போட்டியிடுகிறார்.
இதனையடுத்து கட்சியினருடன் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று (10.02.2022) நாடார் மேடு பகுதிகளில் வீடு வீடாக சென்று திமுக சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் அடிப்படை வசதிகளை உடனடியாக தீர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்தார். வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பை வழங்கினர்.
No comments
Thank you for your comments