Breaking News

சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு குறைவாக வழங்கப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி

ஹரித்துவார்:

வீட்டு வாசலுக்கு வந்து மருத்துவ வசதி வழங்கப்படும் என்று, உத்தரகாண்ட் தேர்தல் பிரசாத்தின் போது ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர காண்ட்  சட்ட சபைத் தேர்தலையொட்டி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, வாக்காளர்களுக்கு நான்கு வாக்குறுதிகளை வழங்கினார். 

உத்தர காண்ட் மாநிலத்தில் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலையை ரூ. 500க்கு குறைவாக நிர்ணயம் செய்தல், 5 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 ரூபாய் மற்றும் வீட்டு வாசலில் மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாக நாங்கள் உறுதியளித்தோம், அதை நாங்கள் நிறைவேற்றினோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

முன்னதாக ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்று கரையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, விளக்குளை ஏற்றி வழிபாடு செய்தார். 

இது குறித்த வீடியோவை தமது ட்விட்டரில் பதிவிட்டார். மாநிலத்தின் ஒளி மயமான எதிர்காலத்திற்காக பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 




No comments

Thank you for your comments