Breaking News

சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் 46-வது ஆண்டு நினைவஞ்சலி

ஈரோடு:

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத்  அவர்களின் 46-வது ஆண்டு  நினைவஞ்சலி  செலுத்தப்பட்டது... 

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத்  அவர்களின் 46-வது நினைவு ஆண்டுகள் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை அருகே பெருந்துறை சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான  இ.திருமகன் ஈவெரா  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார், மண்டல தலைவர்களான ஆர். விஜயபாஸ்கர், திருச்செல்வம், எச் எம் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ. ஆர். ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜெ.சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ. மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்களான ராஜேஷ் ராஜப்பா, கே புனிதன், வி.எஸ்.ஈஸ்வரமூர்த்தி,  எஸ் மோகன், அம்மன் மாதேஷ்,  பாஸ்கர் ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்களான டி.கண்ணப்பன், ஆர் கே பிள்ளை, ரவி என்கிற விவேகானந்தன்,  இரா கனகராஜ், ஏ. வின்சென்ட்,  கராத்தே யூசுப், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பி ஏ பெரியசாமி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஆர் புவனேஸ்வரி,  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் எஸ் முகமது யூசுப், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ் சி பிரிவு துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன்,  முன்னாள் மாமன்ற உறுப்பினர் கை சுப்பிரமணியம்,  எல்.ஐ.சி.கே.சி.பழனிச்சாமி, திண்டல் பாலாஜி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைகள் தலைவர் வழக்கறிஞர் வினோத் மாரியப்பா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கே என் பாஷா, மாவட்ட நிர்வாகிகளான கே. ஜே. டிட்டோ, சிவா என்கிற சிவகுமார், சதீஷ்,  இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி செந்தூர் ராஜகோபால்,  முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு,  ஈரோடு பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே விஜய்கண்ணா,  ஆடிட்டர் சிவாஜி சுரேஷ், சூரம்பட்டி திருவேங்கடம், நசியனூர் நகர தலைவர் நடராஜ் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். 

அதன்பின்னர் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments

Thank you for your comments