Breaking News

வேலூர் மாநகராட்சியில் 354 பேர் போட்டி

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வார்டுகளில் 178 இடங்களுக்கு 819 பேர் போட்டியிடுகின்றனர். 2 இடங்களுக்கு போட்டியின்றி கவுன்லர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 4ம் தேதி நிறைவடைந்தது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வார்டு உறுப்பினர் பதவிகளில், வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளுக்கு 505 பேரும், குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகளுக்கு 234 பேரும். 

பேரணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளுக்கு 105 பேரும், ஒடுகத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 72 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சி 18 வார்டுகளுக்கு 79 பேரும்.

திருவலம் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 63 பேரும், பென்னாத்தூர் பேரூராட்சி 14 வார்டுகளுக்கு 89 பேரும் என மொத்தம் 1,147 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின் போது, வேலூர் மாநகராட்சியில் 33 மனுக்களும், குடியாத்தம் நகராட்சியில் 8, பேர்ணாம்பட்டு நகராட்சியில் 1, ஒடுகத்தூரில் 3, பென்னாத்தூரில் 1, பள்ளிகொண்டாவில் 2 மனுக்கள் என மொத்தம் 48 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திருவலம் பேரூராட்சியில் மனு எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனடி ப்படையில், மாவட்டம் முழுவதும் 1,099 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று மாலை வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டு, வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. 

அப்போது, வேலூர் மாநகராட்சியில் 115 பேரும், குடியாத்தம் நகராட்சியில் 61 பேரும், பேரணாம்பட்டு நகராட்சியில் 7, ஒடுகத்தூரில் 31, பென்னாத்தூரில் 36, பள்ளிகொண்டாவில் 13, திருவலத்தில் 14 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 277 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வார்டுகளில் 178 இடங்களுக்கு 819 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், வேலூர் மாநகராட்சி 58 வார்டுகளுக்கு 354 பேரும்.

குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகளுக்கு 165 பேரும், பேர்ணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளுக்கு 97 பேரும், ஒடுகத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 38 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சி 18 வார்டுகளுக்கு 64 பேரும்.

பென்னாத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 52 பேரும், திருவலம் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 49 பேரும் போட்டியிடுகின்றனர்.

வேலூர் மாநகராட்சி 7வது வார்டுக்கு திமுக வேட்பாளர் புஷ்பலதா வன்னியராஜா, 8வது வார்டுக்கு திமுக வேட்பாளர் எம்.சுனில்குமார் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வந்துள்ளதால் வேட்பாளர்கள் தீவிரமாக களத்தில் இறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments