Breaking News

கடந்த 24 மணி நேரத்தில் 1,07,474 பேர் புதிதாக கொரானா தொற்று உறுதி...

புதுடெல்லி:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 45 லட்சத்துக்கும் அதிகமாக (45,10,770தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 169.46 கோடியைக் (1,69,46,26,697) கடந்தது. 1,87,79,150 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,13,246  பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,04,61,148 ஆக அதிகரித்துள்ளது.

  • தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 95.91 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,07,474 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12,25,011 ஆக உள்ளது; நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 2.90 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14,48,513 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 74.01 கோடி கொவிட் பரிசோதனைகள் (74,01,87,141)  செய்யப்பட்டுள்ளன. வாராந்திரத் தொற்று 10.20  சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 7.42 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795860

No comments

Thank you for your comments