Breaking News

ஐசிசி யு 19 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி:

19 வயதுக்குட்பட்டோர் ஐசிசி உலக கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"நமது இளம் கிரிக்கெட் வீரர்கள் குறித்து மிகவும் பெருமையாக உள்ளது. ஐசிசி யு 19 உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். 

இந்தப் போட்டி மூலம் அவர்கள் பெரும் துணிவைக் காட்டியுள்ளனர். உயர் மட்டத்தில் அவர்களது அளப்பரிய திறமை, இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம், பாதுகாப்பான, திறமையான கரங்களிடம் உள்ளது என்பதைக் காட்டுகிறது".


No comments

Thank you for your comments