Breaking News

ஒரு மஞ்சப்பைக்கு 60 ரூபாய்.. பொங்கல் தொகுப்பு மூலம் 120 கோடி கமிஷன்...- திமுக மீது பாஜக அண்ணாமலை சரமாரியாக குற்றச்சாட்டு

திருச்சி:

ஒரு மஞ்சள் பைக்கு ரூ.5, ரூ.10 தான் விலை இருக்கும். ஆனால் பொங்கல் தொகுப்பில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட மஞ்சள் பையின் விலை ரூ.60 என நிர்ணயிக்கப்பட்டது. 2 கோடியே 15 லட்சம் மஞ்சப்பைகளை வாங்கி அதை ரேஷன் கடை மூலமாக கொடுத்து ரூ.120 கோடி கமி‌ஷன் அடித்து இருக்கிறார்கள்.

நீட் தேர்வு வேண்டாம் என மு.க.ஸ்டாலின் நாட்டில் உள்ள 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் 12 முதல்வர்களும் ஸ்டாலினின் நீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பதிலே சொல்லவில்லை.

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருச்சி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

திமுக அரசு பொங்கல் தொகுப்பாக 21 பொருட்களை கொடுத்தார்கள். வெல்லம் வாங்க மக்கள் வாளிகளை கையில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. மஞ்சள் தூளுக்கு பதிலாக மரத்தூளும், மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டையும் வழங்கி முறைகேடு செய்துவிட்டு உள்ளாட்சி தேர்தலில் அதனை சாதனையாக சொல்லிக் கொண்டு ஓட்டு கேட்கிறார்கள்.

ஒரு மஞ்சள் பைக்கு ரூ.5, ரூ.10 தான் விலை இருக்கும். ஆனால் பொங்கல் தொகுப்பில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட மஞ்சள் பையின் விலை ரூ.60 என நிர்ணயிக்கப்பட்டது. 2 கோடியே 15 லட்சம் மஞ்சப்பைகளை வாங்கி அதை ரேஷன் கடை மூலமாக கொடுத்து ரூ.120 கோடி கமி‌ஷன் அடித்து இருக்கிறார்கள்.

நீட் தேர்வு வேண்டாம் என மு.க.ஸ்டாலின் நாட்டில் உள்ள 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் 12 முதல்வர்களும் ஸ்டாலினின் நீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பதிலே சொல்லவில்லை.

ஏனென்றால் அனைவருக்கும் தெரியும். நீட் யாருக்கும் எதிரானது கிடையாது என்று. தமிழகததில் நீட் தேர்வில் வெற்றி பெற்று ஏராளமான மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்

திமுக ஆட்சியில் 15 தனியார் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவ படிப்பிற்கான சீட்டு கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ளது. இதுதான் தி.மு.க.வின் சமூக நீதி. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 8 மாத காலம் முடிந்துள்ளது. இதனை முழுமையாக பார்க்கும்போது 80 ஆண்டு ஒரு ஆட்சி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு சலிப்பு, கோபம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ராகுல்காந்தி தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்று சொன்னார். அப்பவே பாஜகவுக்கு சுக்கிர திசை ஆரம்பித்து விட்டது. காரணம் அவர் என்ன சொன்னாலும் எதிராகத்தான் இதுவரை நடந்து வருகிறது. மோடி குஜராத் முதல்வராக முடியாது என்றார். 2 முறை ஆட்சி அமைத்தார்.

தமிழகத்தில் பாஜ.க. வேட்பாளர்கள் 12 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பாஜக கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments