Breaking News

கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சாவை போதை பொருள் பறிமுதல்.. 3 பேர் கைது...

காஞ்சிபுரம் :

மதுரை, தேனி கேரளாவிற்கு கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சாவை  போதை பொருள் நுண்ணறிவு  போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரை கைது செய்தனர்.

தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் தமிழ்நாட்டில் அதிகமாக புழக்கத்தில் உள்ளதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழக அரசு போதை பொருட்களை தடுக்கும் விதத்தில்  கடுமையாக ஈடுபட்டு வருகிறது.  சமீபகாலமாக காஞ்சிபுரம் மாவட்ட  போதை பொருள்  நுண்ணறிவு பிரிவினர் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து காஞ்சிபுரம்-பொன்னேரி கரை பகுதியிலும், திருவள்ளூர் மாவட்டம்-காக்களூர் பகுதியிலும் சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது இரண்டு இடங்களிலும் கார்களில் இருந்து110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

110 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு அல்லாமல் வேலூர் சேர்ந்த சுரேஷ், மதுரையை சேர்ந்த உமாசங்கர், தேனியை  சேர்ந்த நீலமலை  ஆகியோர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

மேலும் இவர்கள் பயன்படுத்திய இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் கஞ்சாவை கடத்தி மதுரை, தேனி மற்றும் கேரள மாநிலத்திற்கு விற்க முயன்றதாக விசாரணையில் கூறியுள்ளனர் .

இதுவரை சமீப காலமாக காஞ்சிபுரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சுமார் 500 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.

No comments

Thank you for your comments