இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (UYEGP) வேலையில்லாதவர்கள் பயன்பெறலாம்...
திருவள்ளுர், ஜன.6-
திருவள்ளுர் மாவட்டத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி பொருளாதார முன்னேற்றம் அளிக்கும் பொருட்டு படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation (UYEGP) என்ற திட்டத்தினை உருவாக்கியுள்ளது. அதன்படி, கடந்த 2020-21-ம் வருடத்திற்கு இலக்காக 139 நபர்களுக்கு ரூ.125.00 இலட்சம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டு 2021-22ல் 195 நபர்களுக்கு ரூ.125 இலட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இதுநாள் வரை 84 விண்ணப்பதார்களுக்கு ரூ.74.00 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதிகள் மற்றும் அரசு அளிக்கும் சலுகைகள்
1. குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் அதிகபட்சமாக 35 வயது பொது பிரிவினருக்கும், 45 வயது சிறப்பு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.கல்விதகுதி- குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
3. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதிகபட்சம் உற்பத்தி தொழிலுக்கு ரூ.15.00 இலட்சமும், சேவை மற்றும் வியாபாரத்திற்கும் ரூ.5.00 இலட்சமும், கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். உற்பத்தி தொழிலுக்கான திட்ட மதிப்பு ரூ.15.00 இலட்சமாக வழங்கப்பட்டு வருகிறது.
4. மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேர்காணல் மற்றும் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
5. திட்ட மதிப்பில் 25% மானியம் ரூ. 2.50 இலட்சமாக வழங்கப்பட்டு வருகிறது.
6. தகுதியுள்ள நபர்கள் https://www.msmeonline.tn.gov.in/uyegp/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பம் செய்து விண்ணப்பத்தினை இரு நகல்களாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
மேலும் விவரங்கள் பெற, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, காக்களுர் தபால் நிலையம் அருகில், திருவள்ளுர் மாவட்டம் - 602003 என்ற முகவரியை அணுகுமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்கள்.
விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here 👉 https://www.msmeonline.tn.gov.in/uyegp/
No comments
Thank you for your comments