காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர்க்கு கடும் போட்டி
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் இன்று முதல் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு இன்று முதல் பெறப்படுகின்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டிலும் விருப்ப மனு பெறப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் விருப்ப மனு வழங்க வேட்பாளர் வருகையை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேர்தல் நடைபெற இருப்பதால் போக்குவரத்து மற்றும் தேவையின்றி பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் அருகே தடுப்புகளை அமைத்து வாகனங்களை மாற்று பாதியில் திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சியில் இருந்து தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் பெண் மேயர் என்பதால் மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அமலில் உள்ளதால் வேட்பு மனு தாக்க செய்ய வேட்பாளர் மட்டும் அனுமதிக்கபடுவார்கள் குறிபாக கொரோனா நெகடிங் சான்று மற்றும் முககவசம் சமூக இடைவெளியை கடைபிடித்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவார்.
No comments
Thank you for your comments