அக்கா ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த செளந்தர்யா !
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக நேற்றிரவு அறிவித்தனர். பிரிந்து செல்வதற்கான அவர்களின் முடிவு குறித்து அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் புரொஃபைல் படத்தை மாற்றி தனது சகோதரி ஐஸ்வர்யாவுக்கு தன் ஆதரவைக் காட்டியுள்ளார்.
இன்று அதிகாலையில், சௌந்தர்யா தனது ட்விட்டர் சுயவிவரப் படத்தை, அக்கா ஐஸ்வர்யா மற்றும் அப்பா ரஜினிகாந்த் ஆகியோர் இருக்கும் புகைப்படமாக மாற்றினார். அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது எடுத்த அந்த த்ரோபேக் படத்தில், ரஜினிகாந்தின் மடியில் அமர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கும் படம் தான் அது.
ப்ரொஃபைல் பிக்சர்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து சௌந்தர்யா எதுவும் பேசாத நிலையில், ரசிகர்கள்அவருக்கும் ரஜினிகாந்தின் குடும்பத்தினருக்கும் அன்பையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
”தேவையான நேரத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்கும்படி தன் குழந்தைகளை வளர்த்த சிறந்த அப்பா. வலுவாக இருங்கள் சகோதரி.. உங்கள் சகோதரி, அவரது குழந்தைகள் மற்றும் உங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று ஒரு ரசிகர் அந்த படத்திற்கு பதிலளித்தார்.
#NewProfilePic pic.twitter.com/0SnIQYvkkg
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 17, 2022
No comments
Thank you for your comments