நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து செய்ய முடிவு... இது தான் காரணமா...? அதிரும் சோஷியல் மீடியா
சென்னை :
தனுஷ் மற்றும் அவரது மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இத்தகவல் திரைத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகின்றன.
கஸ்தூரிராஜாவின் மகனான நடிகர் தனுஷ் 2002-ம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானர். தனுஷ் திரைத்துறையில் அறிமுகமான காலகட்டத்திலேயே நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பை பெற்றதன் மூலம் இருவருக்கும் இடையே காதல் உருவானது. தேவதையை கண்டேன் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த போது, தனுஷ் - ஐஸ்வர்யா காதல் விவகாரம் தமிழ் திரையுலகில் பூதாகரம் எடுக்க, 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
தனுஷ் 22 வயதை எட்டியபோது 24 வயது அடியெடுத்து வைத்திருந்த ஐஸ்வர்யாவை மணம் முடித்தார். ஐஸ்வர்யாவை விட இரண்டு வயது இளையவரான தனுஷ், ரஜினியின் மகளை திருமணம் செய்துகொண்டது அன்றைய நாளில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும் நடிக்க வந்த குறுகிய காலத்தில் 22 வயதில் தனுஷ் திருமணம் செய்து கொண்டதும் அன்றைய தினத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
தனுஷ் திரை வாழ்க்கையில் பல்வேறு கிசுகிசுக்களில் அடிபட்ட போதும் 2012-ல் ஐஸ்வர்யா இயக்கிய 3 திரைப்படத்தின் போது கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் உடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார். அந்த சமயத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக பெரும்பாலான பத்திரிக்கை செய்திகள் வெளியானது. எனினும் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த உறவு சுமூக நிலையை எட்டியது.
நடிகர் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தம்பதி 2016-ம் ஆண்டில் மணமுறிவு ஏற்பட்டு பிரிந்தபோது, சௌந்தர்யா ரஜினிகாந்தை வாழ்த்தி தனுஷ் ட்விட்டரில் பதிவு செய்தது அன்றைய நாளில் பரபரப்பாக பேசப்பட்டது.
தனுஷின் வாழ்த்தை ஏற்றுக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் அதனை வரவேற்று ரீடிவீட் செய்ததும் பரவலாக கவனிக்கப்பட்டது. இதன் பின்னர் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் திருமணத்தின் போதும் ரஜினியின் மூத்த மருமகன் என்ற அடிப்படையில் அந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார் நடிகர் தனுஷ்.
இதைதொடர்ந்து, தனுஷ் நடிக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து முத்தக் காட்சிகள் இடம் பெறும் நிலையில், இது அவரது குடும்ப வாழ்க்கையில் பூகம்பங்கள் ஏற்படுத்துவதாக செய்திகள் வெளியானாலும் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இணைந்து பொது நிகழ்ச்சிகளில் தோன்றி தங்கள் உறவு சுமூகமாக இருப்பதை நிரூபித்து வந்தனர்.
அண்மையில் பிறந்தநாள் விழா ஒன்றில் ஐஸ்வர்யாவிற்காக தனுஷ் பாடும் வீடியோ சமூக வளைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இதற்கிடையே ஒரு நடிகையுடன் தனுஷ் அதிக நெருக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் ஒரே செய்தியை ஒரே நேரத்தில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்கள் மணமுறிவை உறுதி செய்துள்ளனர்.
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022
ஏறத்தாழ 18 ஆண்டுகள் நீடித்த பந்தம் நிறைவடைவதாக இருவரும் வெளியிட்டுள்ள செய்தி, திரைத்துறையிலும் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், "நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம். இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.. தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று இருவரும் கூறியுள்ளனர்.
இதன் கீழே தனுஷ், ஓம் நமசிவாய, அன்பை பரப்பவும் என்றும் ஐஸ்வர்யா, "உங்கள் மீது எப்போதும் மிகுந்த அன்பு" என்று குறிப்பிட்டு புன்னகைக்கும் எமோஜியுடன் "கடவுளின் வேகம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் இணையத்தில் தற்போது பரவி வருகிறது.
யூடியூப்பில் வழக்கம் போல் திரை பிரபலங்கள் பற்றி கிசுகிசு சொன்ன பல்வான் ரங்கநாதன், சமீபத்தில் தனுஷ் பற்றியும் கூறினார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்ததால் வேறு வழியில்லாமல் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக ரஜினியே தன்னிடம் கூறியதாக கூறினார்.
அதோடு 16 வருடங்கள் அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்றதாக ஒரு "க்" வைத்து பேசினார். விருப்பம் இல்லாமல் தான் இவர்களின் திருமணம் நடைபெற்றதாக இதனால் பலர் பேசினர். இது கூட விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாம். பல ஆண்டுகளாக இருந்த மனகசப்பு இன்று விரிசலாகி உள்ளதாக கூறி வருகின்றனர்.
ஆனால் இது காரணமல்ல. அவர்கள் இருவரும் திருமணமாகி 16 ஆண்டுகள் சந்தோஷமாக தான் வாழ்ந்ததாகவும், சமீபத்தில் தான் இருவருக்கு இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தங்கமகன் படத்திற்கு பிறகு சமந்தாவுடன், தனுஷ் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதனால் ஐஸ்வர்யா - தனுஷ் இடையே மனகசப்பு உருவாகியதாகவும் கூறப்படுகிறது. சமந்தா - நாகசைதன்யா விவகாரத்து சமயத்திலும் அதன் பின்னணியில் தனுஷ் இருப்பதாக சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.
அதோடு சமீபத்தில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, சமீபத்தில் நடிகர் சிம்புவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்கு வாழ்த்து கூறி இருந்தார். ஏற்கனவே சிம்புவும், ரஜினியின் மகளும் காதலித்து வந்ததாக ஒரு வதந்தி பரவியது. சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு தான் ஐஸ்வர்யா, தனுஷ் திருமணம் நடைபெற்றதாகவும், ரஜினி மகளை திருமணம் செய்ய போகிறார் என்ற காரணத்தால் தான் ஆரம்பத்தில் சிம்பு, லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் சமீபத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது தான் தற்போதைய விவாகரத்து முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
அதே சமயம் இவர்களின் விவாகரத்திற்கு மற்றொரு புதிய காரணமும் கூறப்படுகிறது. ரஜினியின் வற்புறுத்தலின் பேரில் தான் போயஸ் கார்டனில் தனுஷ், பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறாராம். இதனால் கடன் பிரச்சனையில் தனுஷ் சிக்கியதாகவும், அந்த சமயத்தில் உதவால் ரஜினி கை விரித்து விட்டதாகவும், அதனால் மனவருத்தம் மற்றும் விரக்தியில் இருந்த தனுஷ், கடன் பிரச்சனையை சமாளிக்க ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையும் அவர்களின் விவாகரத்திற்கு காரணம் என கூறுகிறார்கள்.
அக்கா ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்த செளந்தர்யா ரஜினிகாந்த்!
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக நேற்றிரவு (திங்கள்கிழமை) அறிவித்தனர். பிரிந்து செல்வதற்கான அவர்களின் முடிவு குறித்து அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் புரொஃபைல் படத்தை மாற்றி தனது சகோதரி ஐஸ்வர்யாவுக்கு தன் ஆதரவைக் காட்டியுள்ளார்.
செவ்வாய்கிழமை அதிகாலையில், சௌந்தர்யா தனது ட்விட்டர் சுயவிவரப் படத்தை, அக்கா ஐஸ்வர்யா மற்றும் அப்பா ரஜினிகாந்த் ஆகியோர் இருக்கும் புகைப்படமாக மாற்றினார். அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது எடுத்த அந்த த்ரோபேக் படத்தில், ரஜினிகாந்தின் மடியில் அமர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கும் படம் தான் அது.
ப்ரொஃபைல் பிக்சர்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து சௌந்தர்யா எதுவும் பேசாத நிலையில், ரசிகர்கள்அவருக்கும் ரஜினிகாந்தின் குடும்பத்தினருக்கும் அன்பையும் ஆதரவையும் தெரிவித்தனர். ”தேவையான நேரத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்கும்படி தன் குழந்தைகளை வளர்த்த சிறந்த அப்பா. வலுவாக இருங்கள் சகோதரி.. உங்கள் சகோதரி, அவரது குழந்தைகள் மற்றும் உங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று ஒரு ரசிகர் அந்த படத்திற்கு பதிலளித்தார்.
#NewProfilePic pic.twitter.com/0SnIQYvkkg
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 17, 2022
This one is not even an year old ra 💔#Dhanush pic.twitter.com/9k3I2zc4Q7
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) January 17, 2022
No comments
Thank you for your comments