Breaking News

மனநலம் பாதிக்கப்பட்ட தங்கையை எரித்துக் கொன்ற அக்கா..!

திருவண்ணாமலை :

தி.மலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மேல்பானாந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு தேவகி (51), இந்திராகாந்தி என்ற இரண்டு மனைவிகள். ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். 

இதில், தேவகிக்கு குழந்தைகள் இல்லை. இந்திராகாந்திக்கு 3 மகன்கள், 1 மகன் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமான நிலையில், ஒரே மகனான மணிகண்டன் விவசாய வேலை செய்து வருகிறார். அவருக்கும் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

இதற்கிடையில், மணிகண்டன் தனது மனைவி மற்றும் தாயாருடன் வீட்டினுள் நேற்று முன்தினம் இரவு உறங்கினார். வீட்டின் வராண்டா பகுதியில் தேவகி தனியாக உறங்கினார். 

 


நேற்று அதிகாலை 4 மணியளவில் தேவகி திடீரென கூச்சலிட்டார்.  இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உள்ளிட்டோர் எழுந்து சென்று பார்த்தபோது தேவகி தீயில் எரிந்துகொண்டிருப்பது தெரியவந்தது.   

அவர் எரிந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் தேவகி உடலில் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைத்தனர். இருப்பினும் தேவகி உடல் பாதி எரிந்த நிலையில் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

தேவகி வசித்த பகுதி கலசபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் இதுதொடர்பாக கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது இந்திரா “நான் தான் தேவகி மீது மண்ணெண்னை ஊற்றி எரித்துக் கொலை செய்தேன்” என்று தெரிவித்தார். எதற்காக தேவகியை கொலை செய்தார்? என்று கேட்டபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பெரும் தொல்லையாக இருப்பதாக கருதி கொலை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இந்திராகாந்தியை கைது செய்தனர்.

🔥Also Read வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் விலைபோகும் அதிகாரிகள்!

No comments

Thank you for your comments