Breaking News

காஞ்சி திருக்கோவில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ காமேஸ்வரர், ஸ்ரீ ஹிரண்யேஸ்வரர் திருக்கோவில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் சர்வ தீர்த்தம் கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் மூலம் நிர்வாகம் நடைபெற்றுவரும் திருக்கோயில்களான ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ காமேஸ்வரர் ஸ்ரீ ஹிரண்யேஸ்வரர் ஆகிய ஆலயங்கள்  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுகிரகத்துடன் அஷ்டபந்தனம் செய்யப்பட்டு ஸ்ரீ அக்ஷயம் டிரஸ்ட் மூலம் முழுமையான திருப்பணிகள் செய்யப்பட்டு ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் விமானம் மற்றும் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம் விசேஷ அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது இதில் கமேஷ்வர குருக்கள் பிரபாகரன் குருக்கள் தலைமையில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஆலயப் பணிகளை சரவணன் ஸ்தபதி சிறப்பாக செய்திருந்தார்

🔥Also Read வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் விலைபோகும் அதிகாரிகள்!

No comments

Thank you for your comments