ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கல்
வேலூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தினை இன்று துவக்கி வைத்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக இன்று (13/1/2022) வேலூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை சார்பாக ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.து.மு.கதிர் ஆனந்த் ஆகியோர் வழங்கினார்கள்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் அரங்கில் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை சார்பாக ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. முருகேஸ்வரி வரவேற்புரையாற்றினார்.
1. திருமண நிதி உதவித் திட்டங்கள்:
1.1 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம்.
1.2. டாக்டர் தர்மாம்மாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம்.
1.3. ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டம்.
1.4 அன்னை தெராசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித்திட்டம்.
1.5. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ .25,000 நிதியுதவி தொகையும் பட்டம் (ம) பட்டயம் படித்த பெண்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ 50,000 நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் 2021-22ம் நிதியாண்டிற்கு மொத்தம் 1166 பட்டதாரி பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரொக்கமாகவும் ரூ.5,83,00,000/- (ரூபாய் ஐந்து கோடியே எண்பத்து மூன்று இலட்சம்) மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் மொத்தம் ரூ.4,54,74000 (நான்கு கோடியே ஐம்பத்து நான்கு இலட்சத்து எழுபத்து நான்காயிரம்) மதிப்பிலான தங்க நாணயமும் ஆக மொத்தம் ரூ.10,37,74,000 (ரூபாய் பத்து கோடியே முப்பத்தேழு இலட்சத்து எழுபத்து நான்காயிரம்) வழங்கப்பட உள்ளது.
1243 பட்டதாரி அல்லாதோருக்கு (Non Degree) பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரொக்கமாகவும் ரூ.3,01,75,000/- (ரூபாய் மூன்று கோடியே ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம்) மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் மொத்தம் ரூ.4,84,77,000 (நான்கு கோடியே எண்பத்து நான்கு இலட்சத்து எழுபத்தேழாயிரம்) மதிப்பிலான தங்க நாணயமும், ஆக மொத்தம் ரூ.7,95,52,000 (ரூபாய் ஏழு கோடியே தொண்ணூற்று ஐந்து இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம்) வழங்கப்பட உள்ளது.
மொத்தம் 2409 பயனாளிகளுக்கு ரூ.18,33,26,000/- (ரூபாய் பதினெட்டு கோடியே முப்பத்து மூன்று இலட்சத்து இருபத்தாராயிரம்) மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை கண்காணிப்பாளர் திரு.கீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments