Breaking News

நந்தா தொழில்நுட்ப கல்லூரியில்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌...

ஈரோடு:

ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லூரியின்‌ மின்னணு மற்றும்‌ தொடா்பியல்‌ பொறியியல்‌ துறை சார்பில்‌ மாணவர்களின்‌ “உட்பொதிக்கப்பட்ட அமைப்பு” (Embedded System) துறையில்‌ தனித்திறனை மேம்படுத்தும்‌ வகையில்‌ “ஈ.டீ.எஸ்‌-அகாதமி” நிறுவனத்துடன்‌ “புரிந்துணர்வு” ஒப்பந்தமும்‌, பயிற்சி முகாமும்‌ மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர்‌ வி.சண்முகன்‌ தலைமையில்‌ நடைப்பெற்ற  இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில்‌ “ஈ.டீ.எஸ்‌-அகாதமி” நிறுவனத்தின்‌ பொறியாளர்‌ தலைவர்‌ பி.டி. பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ செய்வதன்‌ நோக்கங்களையும்‌, அதன்‌ மூலம்‌ மாணவர்களுக்கு கொடுக்கப்படும்‌ பயிற்சிகள்‌ மற்றும்‌ “உட்பொதிக்கப்பட்ட அமைப்பு” பற்றியும்‌ விரிவாக எடுத்துரைத்தார்‌.

பின்னர்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர்‌ எஸ்‌. நந்தகோபால்‌ முன்னிலையில்‌ மின்னணு மற்றும்‌ தொடர்பியல்‌ பொறியியல்‌ துறையின்‌ தலைவர்‌ முனைவர்‌ திருமதி ஆர்‌. ஜெயந்தி மற்றும்‌ சிறப்பு விருந்தினர்‌ பி.டி. பிரபு ஆகியோர்‌ புரிந்துணர்வு ஒப்பந்த கோப்புகளில்‌ கையெழுத்திட்டு பரிமாற்றிக்‌ கொண்டார்கள்‌.

மேலும்‌ ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலர்‌ எஸ்‌. நந்தகுமார்‌ பிரதீப்‌, நந்தா கல்வி நிறுவனங்களின்‌ செயலர்‌ எஸ்‌. திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்‌ எஸ்‌.ஆறுமுகம்‌ மற்றும்‌ நந்தா தொழிநுட்ப வளாகத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ செந்தில்‌ ஜெயவேல்‌ ஆகியோர்‌ வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள்‌.

இந்நிகழ்வில்‌ மின்னணு மற்றும்‌ தொடர்பியல்‌ பொறியியல்‌ துறையினை சார்ந்த உதவி - பேராசிரியர்கள்‌  மற்றும்‌ மாணவர்கள்‌ சுமார்‌ 90 க்கும்‌ மேற்பட்டோர்‌ கலந்து கொண்டு பயன்‌ அடைந்தார்கள்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments