நேதாஜியின் பங்களிப்பிற்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் மோடி
புதுடெல்லி:
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி இந்தியா கேட் பகுதியில் கிரானைட் கற்களாலான பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயருக்கு எதிராக ராணுவ வீரர்களை திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியதாவது :-
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையான அஞ்சலிகள்.
நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான். நான் நேதாஜியிடம் தலை வணங்குகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
सभी देशवासियों को पराक्रम दिवस की ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
नेताजी सुभाष चंद्र बोस की 125वीं जयंती पर उन्हें मेरी आदरपूर्ण श्रद्धांजलि।
I bow to Netaji Subhas Chandra Bose on his Jayanti. Every Indian is proud of his monumental contribution to our nation. pic.twitter.com/Ska0u301Nv
No comments
Thank you for your comments