Breaking News

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

சென்னை

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வையம்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து.  


வெடி விபத்தில் சிக்கியவர்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், வெடிவிபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணமும் அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வையம்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 4 பேர் படுகாயமடைந்தனர். 

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வையம்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூபாய் 3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments