அர்ச்சகர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார் அமைச்சர் முத்துசாமி
ஈரோடு, ஜன.14-
ஈரோடு கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு அமைச்சர் முத்துசாமி புத்தாடைகளை வழங்கினார்..
தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அர்ச்சகர்களுக்கு புத்தாடைகளும், பணியாளர்களுக்கு சீருடைகளும் ரூபாய் 10 கோடி செலவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் திருக்கோயில்களில் பணியாற்றிவரும் பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் அமைச்சர் சு. முத்துசாமி அர்ச்சகர்கள் பூசாரிகள் உள்ளிட்ட 381 நபர்களுக்கு பொங்கல் புத்தாடைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன குறிஞ்சி என். சிவகுமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி, இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் செந்தில் வேலவன், உதவி ஆணையர்/செயல் அலுவலர் வே.சபர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments