மீன் பிடிக்க சென்றபோது பூண்டி ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
திருவள்ளூர், ஜன.24-
பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் மாயமான மீனவரை பல மணி நேர தேடுதலுக்குப் பின் தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் கொழுந்தலூர் கிராமம் ஏழுமலை என்பவரது மகன் விஜயன்(30) இவருக்கு எஸ்தர் என்ற மனைவியும் குகன்(7) என்ற மகன் சுப்ரியா(5) என்ற மகளும் உள்ளனர்.
இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்துவரும் நிலையில் நேற்று முன் தினம் விஜயன் வழக்கம் போல காலை 6 மணி அளவில் பூண்டி ஏரியில் படகில் மீன் பிடிக்க விஜயனை அவரது மனைவி வழக்கம்போல வழி அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து விஜயன் வழக்கமாக 9 மணி அளவில் வீடு திரும்பும் விஜயன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சுமார் 12 மணி அளவில் பூண்டி ஏரியில் அவரது உறவினர்கள் சென்று பார்த்தபோது படகு மட்டும் தணியாக இருப்பதையும் விஜயன் மாயமாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, உறவினர்கள் புல்லரம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கர் உத்தரவின் பேரில், உதவி அலுவலர் வில்சன் ராஜ்குமார், நிலைய அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பூண்டி ஏரியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் விஜயனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரிக்குள் சேற்றில் சிக்கி இருந்த விஜயனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
பின்பு மீட்கப்பட்ட சடலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீன்பிடித்த போது தவறி ஏரிக்குள் விஜயன் விழுந்தபோது அவர் சேற்றில் சிக்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments
Thank you for your comments