Breaking News

மாற்றுத்திறனாளிகளின் தொழிற் பயிற்சி கூடத்தில் கேக் வெட்டி மதிய உணவு வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்...

மாற்றுத்திறனாளிகளின் தொழிற் பயிற்சி கூடத்தில்  கேக் வெட்டி மதிய உணவு வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

அகில இந்திய காங்கிரஸ்   பொதுச்செயலாளரும் உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி அவர்களின் பிறந்தநாள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும்  கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ஏ. செல்லகுமார் அவர்களின் பிறந்த நாள் விழா ஈரோடு செங்கோடம்பாளையம் கொங்கு அறிவாலயம் மாற்றுத்திறனாளிகளின் தொழிற் பயிற்சி கூடத்தில் கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில்   மாற்றுத்திறனாளிகளின் தொழிற் பயிற்சி கூடத்தில்    கேக் வெட்டி  மாணவர்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் சூரம்பட்டி முன்னாள் கவுன்சிலர் சாம்ராட் அசோக்  தலைமையில் முன்னாள் வட்டாரத் தலைவர் எம் செல்வராஜ் முன்னிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி அவர்கள் கேக் வெட்டி மதிய உணவை வழங்கினார். 

இதில்  துணைத் தலைவர்களான கே புனிதன், கே எஸ் செல்வம், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என்.பாஷா, முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி செந்தூர் ராஜகோபால்,  மாவட்ட நிர்வாகிகள் சிவா என்கிற சிவகுமார், சங்குநகர் அப்துல் காதர், கீழ்வாணி பொன்னுசாமி, அக்னி பாலு, சிவகிரி வாசுதேவன், சம்பத் நகர் வார்டு தலைவர் ஜி வேணுகோபால், மாவட்ட சிவாஜி மன்ற தலைமை நிர்வாகி வள்ளிபுரத்தான் பாளையம் எஸ் தங்கவேல் மற்றும் பலர்  கலந்துக்கொண்டனர்.

No comments

Thank you for your comments